ராஜபக்சர்களை விரட்டி அடிக்கவேண்டும்!! பகிரங்க அறைகூவல்

 

இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து, சோமாலியாவின் நிலைக்கு தள்ளியுள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

கண்டி நாவலபிட்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க (Bipil Rathnayake), நாட்டின் கடன் நெருக்கடிக்குக் காரணம் கொரோனா அல்ல, பாரிய நிதி மோசடிகளே எனவும் விமர்சித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “நாட்டில் 110 லட்சம் மக்களின் தொழில், ஆட்சியாளர்களின் சிந்தனையற்ற தீர்மானம் காரணமாக பாதிப்படைந்துள்ளது.

தற்போது பெரும் போகம் நாசமடைந்துள்ளது. வயல் நிலங்களில் வெள்ளநீர் தேங்கிக்கிடக்கின்றது. விவசாயிகள் வயல் நிலங்களுக்குச் செல்லவதில்லை.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவுத் செலவுத்திட்டம் மக்களுக்கானதல்ல. மக்களுக்கு இதன் ஊடாக எந்தவித நிவாரணங்களும் கிடைக்கவில்லை. மக்களின் வாழ்க்கையினை வீழ்ச்சியடையச் செய்துள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். உண்மையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அளவிற்கு நாட்டில் பொருளாதாரம் இல்லை.

இன்று எமது நாட்டை ஹெட்டி மற்றும் சோமாலியாவின் நிலைக்கு ராஜபக்ஷாக்கள் கொண்டு வந்துவிட்டிருக்கிறார்கள். ஆகவே ராஜபக்ஷாக்களை விரட்டியடித்துவிட்டு சிறந்த ஒரு ஆட்சியினை மக்கள் கொண்டுவர வேண்டும்” என்றார்.

Contact Us