தமிழர் தலைநகரில் பெரும் சோகம்-அடுத்தடுத்து கரை ஒதுங்கும் சடலங்கள்-நடந்தது என்ன?

திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் குறிஞ்சாக்கேணி பகுதியில் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.

மேலும் பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் என பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அத்தோடு மீட்கப்படுபவர்கள் உடனுக்குடன் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Contact Us