பிக் பாஸ் வீட்டுக்கு இன்னொரு வைல்டு கார்டு என்ட்ரியும் வந்துட்டாரு.. முதல் புரமோவில் கவனிச்சீங்களா?

 

கடந்த வாரம் அதிரடி ரீ என்ட்ரியாக அபிஷேக் ராஜா உள்ளே நுழைந்த நிலையில், இன்னொரு வைல்டு கார்டு என்ட்ரியும் இப்போ உள்ளே நுழைந்திருக்கிறார்.  பிக் பாஸ் எடிட்டர் கவனிக்கவில்லையா? அல்லது ரசிகர்கள் கண்டு பிடிக்கட்டுமா? என ஒரே ஒரு ஷாட்டில் அந்த பிரபலத்தை காட்ட யார் அவர் என்கிற மொத்த டீட்டெய்லையும் நெட்டிசன்கள் அலசி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் அடிக்கடி செட் போட ஆட்கள் உள்ளே வருவார்கள். அவர்களையும் சேர்த்து புரமோவில் காட்டிட்டீங்களா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் புதிதாக பிக் பாஸ் வீட்டில் ஒரு நபர் இருப்பதை முதல் புரமோவில் கவனித்து விட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அவர் கழுத்தில் பெயர் போட்ட மைக் மாட்டி இருப்பதால் அவர் வைல்டு கார்டு போட்டியாளர் என்பது உறுதியாகி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக் ராஜா கடந்த வாரம் கிஃப்ட் பாக்ஸில் இருந்து இமான் அண்ணாச்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் அளவுக்கு அசத்தல் என்ட்ரி கொடுத்து இருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டுமொரு வைல்டு கார்டு என்ட்ரி இன்று வருகை தந்துள்ளது முதல் புரமோவிலேயே லீக் ஆகி விட்டது.

யாருப்பா நீ திடீரென பாவனி பக்கத்தில் முதல் புரமோவில் வந்து உட்கார்ந்து இருக்கியே என பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்கள் ஜூம் செய்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்கு புதிதாக வந்துள்ளவர் வேறு யாருமில்லை டான்ஸ் மாஸ்டர் அமீர் தான்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் யாருமே சரிவர நடனம் ஆடுவதில்லை என நேற்றே பிக் பாஸ் நடன டாஸ்க் வைத்த நிலையில் புதிதாக டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தான் உள்ளே வரப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. ஊட்டியில் ADS எனும் நடன பள்ளியை நடத்தி வரும் கொரியோகிராபர் அமீர் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 3ல் சாண்டி தான் ஜெயிக்கணும் என பேட்டியெல்லாம் கொடுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை கவனமாக பார்த்து வரும் அமீருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் எப்படி பர்ஃபார்ம் பண்ண போகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

Contact Us