பிரித்தானியா செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-இந்த பொருட்கள் மட்டுமே கொண்டு செல்ல வேண்டுமா..!

பிரித்தானியாவிற்கு செல்லும் சுவிஸ் பயணிகள் என்னென்ன பொருட்களை தங்களுடன் எடுத்துச் செல்லலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அதில் வெளியான அறிவிப்பின்படி…

சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் தங்களுடன் மீன், மாமிசம் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதற்கான விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது அறிவிப்பு வெளியாகி உள்ளது.அத்தோடு பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக கொண்டு வரும் பொருட்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் கிடையாது.

அதேசமயம் பயணிகள் 400 கிலோ சாசேஜ்களை தங்களுடன் கொண்டு வந்தால் கட்டாயம் கேள்விகள் எழுப்பப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, கிரீன்லாந்து, Faroe, Liechtenstein தீவுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மீன், மாமிசம் உள்ளிட்ட பொருள்களை எடுத்து வரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிஸ் மதுபானங்களை பரிசாக கொடுப்பதற்காக பிரித்தானியாவிற்கு கொண்டுவர விரும்புவோர் சுவிஸில் இருந்து தாராளமாக மதுபானங்களை எடுத்து வரலாம். இருப்பினும் மதுபானத்தை எந்த அளவு பிரித்தானியாவிற்கு கொண்டு செல்ல முடியுமென்பதற்கான வரையறைகளை அறிந்து கொண்ட பிறகு எடுத்து செல்வது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Contact Us