அமெரிக்கா விடுத்த திடீர் தடை-இனி இந்த நாடுகளுக்கு செல்ல முடியாதா..இது தான் காரணமாம்..!

டென்மார்க் மற்றும் ஜேர்மனிக்கு அமெரிக்கர்கள் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த இரு நாடுகளுக்கும் கொவிட் கால பயணத்தில் நான்காம் எண் எச்சரிக்கை நிலை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த இரு நாடுகளும் கொவிட் பரவலில் மிகவும் அபாயம் எனும் நிலையில் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த அபாய பிரிவில் ஆஸ்திரியா, இங்கிலாந்து, பெல்ஜியம், கிரீஸ், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து செக் குடியரசு, ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்நிலையில், ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல், கொவிட்டை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுதாகவும் தெரிவித்துள்ளார்.

Contact Us