வரலாறு படைத்த சுபாஷ்கரன்: உலகில் முதல் தமிழன் Paris Football கிளப்பை வாங்கியுள்ளார் !

1969ம் ஆண்டு பிரான்சின் பரிஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது தான் பரிஸ் உதைபந்தாட்டக் கழகம். PFC பின்னர் பல சாவல்களை எதிர்கொண்டு,  வென்று,  பின்னர் 1980 பதுகளில் ஜேர்மன் அமைப்போடு இணைந்தும் இந்தக் கழகம் பல போட்டிகளை சந்தித்து வென்றது. பிரான்ஸ் நாட்டில் உள்ள, உதை பந்தாட்ட கழகங்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகவும் பிரபல்யமான கழகம் பாரிஸ் உதைபந்தாட்டக் கழகம் ஆகும். அதன் தற்போதைய மதிப்பு, பல மில்லியன் யூரோக்கள் ஆகும். குறித்த கழகத்திற்கு கடந்த அண்டு, பாரின் நாட்டு ராஜ குடும்பம் ஆதரவாளர்களாக இருந்து வந்துள்ளது. இருப்பினும் இந்தக் கழகத்தை இதுவரை எந்த ஒரு தமிழ் நிறுவனமும் ஆதரவு கொடுக்கவும் இல்லை. அதனை முழுமையாக வாங்கவும் இல்லை. இன் நிலையில் லைக்கா குழுமம் பாரிஸ் உதை பந்தாட்டக் கழகத்தை வாங்கியுள்ளதோடு , அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது.

உலகில் பல சாதனைகளை படைத்து வருகிறார் தமிழரான, திரு சுபாஷ்கரன் அல்லி ராஜா அவர்கள். அதுவும் அவர் ஒரு ஈழத் தமிழர் என்பதும், அகதியாக ஐரோப்பா வந்தவர் என்பதும் பலர் அறியாத விடையம். தனது கடின உழைப்பால் இன்று மலை போல உயர்ந்து நிற்கிறார். உலகில் உள்ள பல முன்னணி உதை பந்தாட்ட கழகங்கள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவ மனைகளை சுபாஷ்கரன் அவர்கள், வாங்கி தனது குழுமத்தில் இணைத்து வருகிறார். அண்மையில் லண்டனில் கிங்ஸ் வைத்தியசாலையை 140 மில்லியன் பவுண்டுகளுக்கு கொள்வனவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.  அத்தோடு 24 நாடுகளில் லைக்கா மோபைல் நிறுவனம், கொடி கட்டிப் பறந்து வருகின்றமையும். (MVNO) Mobile virtual network operator உலகிலேயே,  நம்பர் ஒன் கம்பெனியாக திகழ்ந்து வருகிறார்கள், என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us