இங்கிலாந்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போதே அயலவர்களால் கொல்லப்பட்ட பெற்றோர்கள்?


பிள்ளைகள் வீட்டில் இருந்த போது பெற்றோர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டீபன் மற்றும் ஜென்னி சாப்பிள் என்று பெயரிடப்பட்ட இந்த ஜோடி ஞாயிற்றுக்கிழமை இரவு டவுண்டனுக்கு அருகிலுள்ள நார்டன் ஃபிட்ஸ்வாரன் என்ற சோமர்செட் கிராமத்தில் வைத்து பிள்ளைகள் வீட்டில் இருந்த நேரம் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது கொல்லப்பட்ட இருவரும்  34வயதான திரு சாப்பிள் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் என்றும் 33 வயதான அவரது மனைவி தோட்ட மையத்தில் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகி்னறது.

அயலவர்களுடன் நீண்ட காலமாக ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவி இருவரும் கொல்லப்பட்டதாக பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் கொலைச் சந்தேகத்தின் பேரில் 34 மற்றும் 67 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us