“விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சுற்றுலா பேருந்து!”.. குழந்தைகள் உட்பட 45 பேர் பலி.. பல்கேரியாவில் பரிதாபம்..!!

பல்கேரியாவின் மேற்கில் இருக்கும் சோபியா நகரத்திலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் சென்ற பேருந்து அதிகாலை நேரத்தில் விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து, அந்த பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் 12 குழந்தைகள் உட்பட 45 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து ஏழு நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது சரியாக தெரியவில்லை. இந்நிலையில் அந்நாட்டின் இடைக்கால பிரதமர் ஸ்டெபான் யானேவ் விபத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், விபத்தில் பலியான பெரும்பாலானோர் வடக்கு மேசிடோனியா நாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் என்று தெரியவந்திருக்கிறது.

Contact Us