“வாகனத்திலிருந்து தலையின்றி விழுந்த உடல்!’.. கொலை செய்வது எனக்கு பிடிக்கும்.. விசாரணையில் அதிரவைத்த நபர்..!!

ரஷ்யாவில், ஒரு வாகனம் அதிவேகத்தில் சென்று சாலை தடுப்பின் மீது மோதியிருக்கிறது. அப்போது வாகனத்தின் கதவு தானாகவே திறந்து, அதிலிருந்து தலையில்லாத உடல் சாலையில் விழுந்திருக்கிறது. அதன்பின்பு, வாகனத்தில் இருந்த Yegor Komarov என்ற நபர் மற்றும் இருவர் இறங்கி வனப்பகுதியை நோக்கி ஓடியிருக்கிறார்கள்.

இது தொடர்பில் காவல்துறையினர் கூறியுள்ளதாவது, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்த 50 வயது தொழிலதிபரின் உடல் தான் அது. அந்த மூவருக்கும், தொழில் அதிபருக்குமிடையே நடந்த மோதலில் தொழிலதிபரை அவர்கள் கொன்று உடலை வனப்பகுதியில் புதைக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால், Yegor Komarov-யிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது, அவர் “கொலை செய்வது தனக்கு பிடித்த செயல்” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இது மட்டுமல்லாமல், இதற்கு முன்பு, மனித மாமிசம் சுவைக்க ஆசைப்பட்டு, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் ஒரு பூங்காவில் ஒரு நபரைக் கொன்று அவரின் மாமிசம் மற்றும் ரத்தத்தை சாப்பிட்டதாகவும், அவரின் நாக்கை வெண்ணையில் பொரித்தெடுத்து உண்டதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால், அதன் சுவை தனக்கு பிடிக்கவில்லை. எனவே, அந்த சடலத்தை கழிவுநீர் வடிகால் குழாயில் போட்டு விட்டேன் என்று கூறியிருக்கிறார். அதன்பின்பு காவல்துறையினர் அவருக்கு கைவிலங்கு போட்டபோது, அதனை நன்றாக அணிவியுங்கள். இல்லையெனில் அதையும் நான் கடித்து தின்று விடுவேன் என்று கூறியதால் காவல்துறையினர் அதிர்ந்துவிட்டனர்.

Contact Us