வெளிநாடு செல்ல முயற்சித்த வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது (படங்கள் இணைப்பு)

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் பெருந்தொகைப்பணத்தை துபாய்க்கு கொண்டு செல்ல முயற்சித்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு கோடியே 40 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் சர்வதேச நாணயம் காணப்பட்டதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

துபாய் செல்வதற்காக வந்திருந்த குறித்த சந்தேகநபர் பயணப்பொதியில் சூட்சுமமாக வைத்து பணத்தொகையை கொண்டுசெல்ல முயற்சித்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Contact Us