கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தை: புதைக்கச் சென்ற இடத்தில் அயலவர்கள் ஓடி வந்து மீட்டார்கள் பாருங்கள்…

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கூறப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றையே இவ்வாறு புதைக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் தன்னுடைய தாயாருடன் இணைந்தே பிறந்த குழந்தையை புதைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. குழந்தையை புதைக்க முற்பட்ட போது குழந்தை அழுததன் காரணமாக குறித்த வீட்டிற்கு அயலவர்கள் சென்று பார்த்த போதே விபரீதம் தெரிய வந்தது. அதனையடுத்து உடனடியாக அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Contact Us