லண்டன் தொடக்கம் முழு ஐரோப்பாவிலும் கடுமையாக எகிறியுள்ள கொரோனா- பெரும் ஆபத்தில் மக்கள் !

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதில் 2 ஊசி எடுத்துக் கொண்டவர்கள், 3வது பூஸ்டர் ஊசி எடுத்துக் கொண்டவர்கள் என்று பலரும் அடங்குகிறார்கள். பூஸ்டர் ஊசி எடுத்த நபர்களையும் இந்த கொரோனா விட்டு வைக்க வில்லை. இதில் 3 ஊசி எடுத்த பல நபர்களை குறித்த கொரோனா தாக்கி, வைத்தியசாலை வரை கொண்டு செல்கிறது என்பது மிகவும் அதிர்ச்சி தரும் விடையம். இதேவேளை பிரான்ஸ் ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் கொரோனா தொற்று பன் மடங்காக எகிறியுள்ளது. இதேவேளை நாம் மேலும் அதி சக்த்தி கொண்ட பைசஃர் மருந்தை கண்டு பிடித்துள்ளோம் என்று, நிறுவனம் கூறுகிறது. மாதம் தோறும் வித்தியாசமான மருந்துகள் வெளியாகிறது… எல்லாமே மார்கெட்டிங்காக உள்ளதே தவிர எவரும் மனித உயிர் பற்றி பேசுவதே இல்லை. இன் நிலையில்…

மேலும் மேலும் தரப்படுத்தப்பட்ட மருந்துகள் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளதாக குறித்த கம்பெனிகள் அறிவித்துள்ளது. அப்படி என்றால் அவர்கள் முன்னர் தயாரித்த மருந்துகள் என்ன தரம் குறைந்தவையா ? என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா ? அண்டவனுக்கே வெளிச்சம்.

Contact Us