19 வது மாடியில் தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி- 18வது மாடியில் கால்களும் 17வது மாடியில் உடலுமாம்…நடந்தது என்ன?

 

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்கு மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் 82 வயது பெண்மணி ஒருவர் 19 வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே தவறுதலாக விழுந்துள்ளார்.

மேலும் அவர் அதிர்ஷ்டவசமாக 18வது மாடியில் இருக்கும் துணியை காயப்போடும் ரேக்கில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தார். அவருடைய கால்கள் 18வது மாடியிலும், உடல் பகுதி 17வது மாடியிலும் இருந்தன.

எனினும் இதனையடுத்து இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பெண்மணியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்டனர். நல்ல வேளையாக இதில் பெண்மணிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.இதோ அந்த வீடியோ…

Contact Us