கணவனுக்கும்,கள்ளக்காதலனுக்கும் டிமிக்கி கொடுத்து உல்லாசம்.. 17 வயது சிறுவன் செய்த காரியம்.. திடுக்கிடும் தகவல்

17 வயது சிறுவனுடன் அழகம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்லவேலு இல்லாத போது இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அழகம்மாள் சிறுவனுடன் படுக்கையறையில் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேட்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள புதூர் பள்ளிக்கூடம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல் (36 ). லாரி டிரைவரான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு 7.30 மணியளவில் செல்லவேல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மேல் காவிரி கிராஸ் பகுதியில் மேற்கு கரை கால்வாய் அருகே சென்ற போது, அவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செல்லவேலுக்கு மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி அழகம்மாள் (40) என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால், கணவர், மனைவிக்கு இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் உடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே செல்லவேலு ஓட்டி வந்த லாரியில் கிளீனராக பணியாற்றிய மேட்டூர் காவிரி கிராஸ் அருகே உள்ள குண்டுகல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் அழகம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்லவேலு இல்லாத போது இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அழகம்மாள் சிறுவனுடன் படுக்கையறையில் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, இருவரையும் கண்டித்துள்ளார்.மேலும் உனது பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து தன்னை செல்லவேல் ஏதாவது செய்து விடுவாரோ என பயந்துபோன சிறுவன் செல்லவேலை நோட்ட மிட்டு வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். மேலும், இந்த கொலை வேறு யாருக்காது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Contact Us