தமிழர்களின் தாக்குதலுக்கு ஆளான அமெரிக்கா: கடைசியில் மாற்ற வேண்டிய நிலைக்குச் சென்றது !

சுமந்திரன் குழுவினர், அமரிக்க ராஜாங்க திணைகளத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவி செயலாளர் லீசா பீற்றர்சன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனும், உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் சந்திப்புக்களை நடத்தினர். இந்த அமைப்பு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், தாம் “””””சிறுபாண்மை தமிழர்களை””””” சந்தித்ததாக ரிவிட்டரில் போட்டார்கள். இதனை பற்றி சுமந்திரனோ இல்லை GTF அமைப்போ கவலைப்படவும் இல்லை. இப்படியான சொல்லைப்  பாவித்தால், தமிழர்களுக்கு வரும் ஆபத்தைப் பற்றி அவர்கள் உணரவும் இல்லை. ஆனால் உலகளாவிய ரீதியில் இந்த ரிவீட்டுக்கு கடும் எதிர்ப்பு தோன்றியது. தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்கள் சிறுபாண்மை இனத்தவர்கள் அல்ல, என்று பல தமிழர்கள் துணிந்து அமெரிக்க ரிவிட்டுக்கு எதிராக தமது கருத்துக்களை பதிந்தார்கள். பல ஆயிரம் எதிர் வினைகள் தோன்றியதை அடுத்து. அமெரிக்க ஸ்டேட் திணைக்கள் தனது ரிவீட்டை மாற்றி அமைத்துள்ளது… தற்போது…

மாற்றி எழுதப்பட்ட ரிவீட்டரில்,  தாம் தமிழர்களோடு பேசியதாக, கூறியுள்ளார்கள். அந்த சிறுபாண்மை என்ற சொல்லை அகற்றியுள்ளார்கள். இதற்கு கூட வித்தியாசம் தெரியாத GTF அமைப்பும் சுமந்திரன் அணியும், பந்தா காட்ட தான் அமெரிக்கா சென்று பேசியுள்ளார்களே தவிர. தமிழர்களின் நியாயமான தீர்வை முன் வைக்க அல்ல. அது போக அமெரிக்கா தற்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை , கருத்தில் கொண்டு தான், தமிழர்கள் தரப்போடு பேச ஆரம்பித்துள்ளது. எனவே அமெரிக்கா தன் நலன் முடிந்த பின்னர்,  எந்த வேளையும் தமிழர்களை மீண்டும் களற்றி விடும். ஆப்கானிஸ்தானை கைவிட்டது போல…. மண் குதிரையை நம்பி எப்படி ஆற்றில் இறங்குவது. ஆனால் புலம் பெயர் தமிழர்கள் கொடுத்த கடும் நெருக்குதல் காரணமாக, தனது ரிவீட்டை அமெரிக்கா மாற்றியமைத்துள்ளது,  என்பது புலம் பெயர் தமிழர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி தான்.

Contact Us