சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழில் கூலிப் படையை ஏவி தாக்குதல்!

உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை யாழ். மாவட்ட புலனாய்வுப் பொலிஸார் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 4 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

காணிப் பிரச்சினை ஒன்றுக்காக அயல் வீட்டுக்காரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவமே இவ்வாறு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளும் அளவுக்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிஸ்லாந்தில் வசிக்கும் நபர் ஒருவர், இந்த சந்தேக நபர்களான கூலிப்படைக்கு 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து குறித்த வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்கு சேதம் விளைவிக்க திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, கடந்த 19 ஆம் திகதி மேற்படி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Contact Us