தமிழ் இளைஞர் தொடர்பில் கனடா பொலிசார் வெளியிட்ட தகவலால் பெரும் பரபப்பு!

கனடா நாட்டில் தமிழ் இளைஞர் மாயமான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கனடாவில் வசித்து வந்த 30வயதுடைய ஆறுமுகம் ரகுநாதன் எனும் தமிழ் இளைஞன் மாயமானதாக பொலிசார் தெரிவித்திருக்கிறார்கள்.இவர் நேற்று மாலை 7:20 மணிக்கு டான்ஃபோர்த் அவே & விக்டோரியா பார்க் ஏவ் {Danforth Ave & Victoria Park Ave} என்ற பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளார். அதன் பின்பு அவரை காணவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.

ஆறுமுகம், 5 அடி 3 அங்குலம் உயரமுடையவர் என்றும் அவரின் தலைமுடி, கருப்பு நிறத்தில் சுருளாக இருக்கும் என்றும் பொலிசார் தெரிவிக்கிறார்கள். அத்தோடு அவரின் புகைப்படத்தை வெளியிட்டு, தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Contact Us