பிரான்ஸ் பொலிஸ் பார்த்துக் கொண்டு இருக்க டோவர் புறப்பட்ட 35 பேர் கடலில் மரணம்: குளிரில் நடுங்கியே இறந்தார்கள் !

நேற்று இரவு பிரான்ஸ் கலை என்னும் இடத்தில், இருந்து படகு மூலம் பிரித்தானிய வர என 35 பேர் புறப்பட்டுள்ளார்கள். இதில் 2 சிறு கைக் குழந்தைகளும் அடங்குகிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்த பிரான்ஸ் பொலிசார் அவர்களை தடுக்கவில்லை. மாறாக சிரித்துக் கொண்டு, அவர்கள் கடல் நோக்கிச் செல்வதை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். இவை அனைத்தையும் ஒரு மர்ம நபர் வீடியோவாக படம் பிடித்துள்ளார். ஆனால் குறித்த படகில் புறப்பட்ட 35 பேரும், பிரான்ஸ் கடலை கடந்து, பிரித்தானியா வரும் வேளை இறந்து விட்டார்கள். கடல் கொந்தளிப்பு காரணமாக அவர்கள் படகு பிரண்டுள்ளது. உறையும் தண்ணீரில் நடுங்கியே அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக பிரித்தானியா அறிவித்துள்ளதோடு… இந்த கொலையை பிரான்ஸ் பொலிசார் தான் நடத்தியுள்ளார்கள் என்று…

குற்றம் சாட்டியுள்ளது பிரித்தானியா. இதற்கு பிரான்ஸ் பொலிசார் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை தடுத்து இருந்தால் இன்று பலர் உயிரோடு இருந்திருப்பார்கள். ஆங்கிலக் கால்வாய் என்பது மிகவும் ஆபத்தான ஒரு கடல். சைஃபர் பாகையில் தான் கடல் உறை நிலையில் இருக்கும். கடும் குளிர் மற்றும் கடும் காற்று அடிக்கடி வீசுவது உண்டு. இதனால் கப்பல் போக்குவரது கூட நிறுத்தப்படுவது வழக்கம். இன் நிலையில் சின்னம் சிறிய படகில் எப்படி கடப்பது ?

Contact Us