இவரை உங்களுக்கு நினைவிருக்கும்: சாவில் இருந்து மீண்ட குமார் மீண்டும் 5 நாட்களில் இறந்தார் !

கடந்த வாரம் குமார் என்னும் இந்த 40 வயது நபர் மீது, படு வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. குமாரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்கள். ஆனால் அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில். அவரை பிண அறையில் உள்ள கடும் குளிரூட்டியில் போட்டார்கள். ஒரு இரவு முழுவதும் பிண அறையில் இருந்த குமார் திடீரென விழித்துக் கொண்டார். இதனை ஒரு அற்புதமாகவே மருத்துவர்கள் கருதினார்கள். அவரது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்ததோடு. உடல் உறுப்புகளும் இயங்க ஆரம்பித்தது. ஆனால் அவருக்கு நினைவு மட்டும் திரும்பவில்லை. இதனை அடுத்து அவர் தலையில் அடிபட்டதால், மூளையில் ரத்தக் கசிவு இருந்து வந்ததை மருத்துவர்கள் கண்டு பிடித்து… உடனே..

மேலதிக சிகிச்சைக்காக அவரை LLRM என்ற பெரிய மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் 5 நாட்கள் கழித்து அவர் கோமா நிலைக்கு சென்று மீண்டும் இறந்து விட்டார் என்று தற்போது உறுதிசெய்யபப்ட்டுள்ளது.

Contact Us