இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல் – ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு தொடர் நடவடிக்கைகளுக்காக நீதியரசர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.மேலும் பாராளுமன்ற சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கெதிராகச் சட்டத்தை நிறைவேற்ற முடியும். அதற்கு அவசியான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த கோரிக்கைகளை முன்வைக்கும்போது கவனமாக இருப்பதுடன், மக்களை ஏமாற்ற வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us