பொம்மை முதலையிடம் செல்பி எடுப்போமென்று போனவரை தாக்கிய முதலை: பிறந்தநாள் பரிதாபம்!

 


பொம்மை முதலை என நினைத்து செல்பி எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெஹிமியாஸ் சிப்பாடா என்பவர் தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் என்ற இடத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவிற்குச் சென்றார்.

மேலும் அங்கு 12 அடி நீளத்திற்கு இருந்த முதலையைக் கண்ட அவர், அது பொம்மை என நினைத்து அது இருந்த குழிக்குள் இறங்கி செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த முதலை நெஹிமியாசின் கையைக் கடித்துப் பிடித்துக் கொண்டதாம்.

அப்போதுதான் உண்மையான முதலையிடம் சிக்கிக் கொண்ட விஷயம் அவருக்குத் தெரியவர, சில விநாடிகள் அமைதியாக யோசிக்கும் போது, திடீரென தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டாராம்.

Contact Us