யாழ் வேம்படி மகளிர் பாடசாலை உயர்தர மாணவி தவறான முடிவெடுத்து மரணம்.

யாழ் அரியாலை காந்திநிலையப் பகுதியைச் சேர்ந்த யாழ் வேம்படி மகளிர் பாடசாலை உயர்தர மாணவி தவறான முடிவெடுத்து மரணம். செல்வி பிரேமச்சந்திரன் திசாரா, இன்று அதிகாலை (25.11.2021) 1.00 மணியளவில் தவறான முடிவெடுத்து இறைவனடி சேர்ந்துவிட்டார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வேம்படியில் கற்றுவந்த வேளையில் இன்றைய தினம் செயன்முறை பரீட்சை தொடர்பாக பாடசாலைக்கு வருமாறு ஆசிரியரால் அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கான தயார்ப்படுத்தல்களையும் செய்துவிட்டு தாய், அண்ணன், பேரன் பேத்தியுடன் சந்தோசமாகவே ரீவி பார்த்துவிட்டே இந்த தவறான முடிவை எடுத்துள்ளார்.

சில வருடங்களின் முன்னர் தந்தையை இழந்திருந்த நிலையில் தாய் மற்றும் தமையனின் குறிப்பாக பேரன் பேத்தியின் பூரண அன்பு, அரவணைப்பு , பாசத்துடன் எந்தக் குறையுமின்றி வளர்ந்துவந்த குட்டி தேவதை காலனின் அழைப்பில் சென்றுவிட்டார்.

Contact Us