ரஷ்ய படைகளை எதிர்கொள்ள நிற்க்கும் 300 பிரித்தானிய வீரர்கள் இவர்கள் தான்- என்ன என்ன வைத்திருக்கிறார்கள் தெரியுமா ?

யுக்ரைன் நாட்டை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா சுமார் 1 லட்சம் படைகளை, எல்லையில் குவித்து வைத்திருக்கிறது. நடத்தப்பட்ட இந்த பெரும் படை நகர்வுகள், பெரும்பாலும் இரவில் இடம்பெற்றது. முடிந்தவரை எதிர்கள் கண்டு பிடிக்காமல் இருக்க ரஷ்யா பல திரை மறை நாடகங்களை ஆடியது. இருப்பினும் அமெரிக்கா கண்டு பிடித்து விட்டது. இன் நிலையில் நேச நாட்டுப் படைகள் உடனடியாக யுக்ரைன் நாட்டிற்கு உதவிகளை புரிய ஆரம்பித்தது. இன் நிலையில் யுக்ரைன் மற்றும் ரஷ்ய எல்லையில் முதல் கட்ட களப் பணியில் சுமார் 300 மிக அனுபவம் உள்ள பிரித்தானியப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 4 பேர் கொண்ட சிறிய பிளாட்டூன் குழுவாகவே இயங்கி வருகிறார்கள். இவர்கள் கைகளில்…

50 கலிபர் துப்பாக்கிகள் உள்ளது. ரோபோ இயந்திரங்கள் உள்ளது. சுடு கலன் கொண்ட ரோபோக்கள், மேலும் சொல்லப் போனால் அவை கண்ணி வெடிகளையும் கண்டு பிடிக்கும். எதிரியையும் தாக்க வல்லவை. உடனே ஏவக் கூடிய ஆளில்லா விமானம். ரஷ்ய படைகள், நகர்ந்தால் உடனே அவர்கள் நகர்வை அடுத்த நிமிடமே வானில் இருந்து கண்காணிக்க முடியும். மைக்கிரோ ட்ரோன் என்று அழைக்கப்படும், மிகச் சிறிய பூச்சி வடிவில் உள்ள ஆளில்லா விமானங்கள் இவர்கள் கைகளில் உள்ளது. மேலும் ஸா80 என்று அழைக்கப்படும் அதி நவீன இயந்திர துப்பாக்கிகள், மோப்ப நாய்கள், என்று பல வகையான ஆயுதங்கள் , சகிதம் பிரித்தானிய படைகள் நிற்கிறார்கள். அதிலும் அக்பானிஸ்தானில் நின்று, பல போர்களங்களை கண்ட அனுபவம் மிக்க வீரர்களை தான் பிரித்தானியா ரஷ்ய எல்லைக்கு அனுப்பியுள்ளது.

Contact Us