அதிகாலையில் வகுப்பு வைத்து கடுப்பேத்திறிங்களாடா: மாணவி செய்த வேலையால் அதிர்ந்துபோன பாடசாலை!

 

இங்கிலாந்தில் மாணவி ஒருவர் வகுப்பறைக்குள் வித்தியாசமான முறையில் சென்ற காட்சி உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதாவது இங்கிலாந்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லெய்செஸ்டெர்சயர் (Leicestershire) பல்கலைகழக மாணவர்களை 9மணிக்கு அழைத்துள்ளார் ஆசிரியர்.இதை அறிந்த டிக்டாக்கர் மக்தா (Magda) என்ற மாணவி மறுநாள் கல்லூரிக்கு இரவு உடையுடன் தள்ளு வண்டியில் மெத்தையுடன் கல்லூரி வளாகத்திற்க்குள் நுழைந்தார்.

அத்தோடு நேராக வகுப்பறைக்கு சென்ற அவர் வகுப்பறையில் மெத்தையை எடுத்து போட்டு படுத்து கொண்டார். இவருக்கு பின் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள் நாம் வகுப்புக்கு தானே வந்திருக்கோம் படுக்கறைக்கு இல்லையே என குழம்பி போனார்களாம்.

மேலும் இந்த காணொளியை தனது டிக் டாக் பக்கத்தில் பகிர்ந்துள்ள மக்தா, அதிகாலை வகுப்பு இருக்கிறது இருந்தும் மெத்தையில் இருக்க விரும்புகிறேன் என்று கேப்சன் கொடுத்துள்ளார். இந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

Contact Us