நாம் சாகப் போகிறோம்… பிரிட்டன் செல்ல முடியாது போல இருக்கு கடல் கொந்தளிக்கிறது கடைசியாக பேசிய நண்பர்கள் இவர்கள் தான்…

நேற்று முன் தினம், 31 அகதிகள் பிரான்ஸ் கலை என்னும் கடல் கரை இடத்தில் இருந்து, சிறு படகு ஒன்றின் மூலம் பிரித்தானியா வர முயற்ச்சி செய்துள்ளார்கள். ஆனால் கடல் சீற்றம் காரணமாக அவர்கள் படகு பிரண்டது. இதில் குளிரில் நடுங்கியே( ஹைப்பத்தேமியா) அனைவரும் சில நிமிடங்களில் இறந்து விட்டார்கள். இதேவேளை ரிஸ் மொகமெட்(12) சாரீஷ் மொகமெட்(17) ஆகிய இரு சகோதரர்களும் , கடலில் அவர்களது படகு தள்ளாடும் போது கரையில் இருந்த நண்பர்களோடு தொடர்பு கொண்டு, நாம் பிரித்தானியா செல்ல முடியாது போல உள்ளது. கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. நாம் இறக்கப் போகிறோம் என்று எல்லாம் பேசி உள்ளார்கள். கரையில் இருந்த நண்பர்கள் அவர்களுக்கு தைரியம் சொல்லி உள்ளார்கள். ஆனால் சில நிமிடங்களில் எல்லாம் அவர்கள் படகு பிரண்டு விட்டது. 2 கை குழந்தை உட்பட 31 பேர் மிக மிக பரிதாபமாக இறந்து விட்டார்கள். பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கைகளில் தான் இந்த ரத்தக் கறை படிந்துள்ளது.

Contact Us