“ஆவியாக வந்து விளையாடிய நாய்!”.. சிறிது நேரத்திற்குள் மறைந்த ஆச்சர்யம்.. வெளியான வீடியோ..!!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜேக் டிமார்கோ, தனது செல்லப்பிராணி, ஆவியாக வந்த நாயுடன் விளையாடியதாக கூறியுள்ளார். மேலும் தன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ, 7 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. எனினும், சிலர் அது ஆவியாக வந்த நாய் இல்லை, என்றும், இது வதந்தி என்றும் கூறிவருகின்றனர்.

அதாவது, ஜேக் டிமார்கோ, தன் வீட்டின் முன்பு வெள்ளை நிறத்தில் நாய் போன்ற ஒரு உருவம், தன் நாயை துரத்துவதை பார்த்திருக்கிறார். அதன்பின்பு, அந்த நாயுடன் தன் குட்டி நாய் விளையாடுவதை, தன் வீட்டிற்குள் இருந்து கண்காணிப்பு கேமராவில் பார்த்திருக்கிறார். எனவே, உடனடியாக வெளியில் ஓடி வந்து அதனை பார்க்க முயற்சித்திருக்கிறார்.

ஆனால், அதற்குள் அந்த உருவம் மறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதாவது, அவர் இருக்கும் பகுதியில், மிகப்பெரிய வேலி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே சிறிது நேரத்திற்குள், எந்த ஒரு நாயும் அந்த வேலியின் மீதி ஏறி குதித்து, விளையாடிவிட்டு மீண்டும் தப்பிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

Contact Us