இலங்கையில் வாங்க ஆயுதம் இங்க இருக்கு என அழைத்து சென்று பொலிசாரை போட்டுத்தள்ள முயற்சித்த டிங்கர் லசந்தவை போட்டுத்தள்ளிய பொலிசார்!

 

உலக பாதாளக்குழுவின் முக்கிய உறுப்பினர் ‘டிங்கர் லசந்த’ என அழைக்கப்படும் ஹேவாலுனுவிலகே லசந்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் களுத்துறை -தியகம பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இச்சம்பவத்தில் மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட நபர் பாதாள உலகக்குழு உறுப்பினரான சன்ஷைன் சுத்தாவின் கொலை உள்ளிட்ட மேலும் பல படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

Contact Us