இலங்கையில் பாடசாலை விட்டு வீடு சென்ற மாணவியை இழுத்து சென்று துஸ்பிரயோக முயற்சி: முகத்தை கடித்துவிட்டு தப்பியோடினார்!

 

 

பாடசாலை சென்று விட்டு வீடு திரும்பிய மாணவிக்கு வீதியல் நடந்த சம்பவம் எல்லேரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதாவது 17வயது நிரம்பிய மாணவி ஒருவர் நேற்று வியாழக்கிழமை பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பும் வேளையில் ஸ்கூட்டரில் வந்த ஒருவர், வீதியில் மாணவியை மறித்து, மாணவியைத் தாக்கி, அருகில் உள்ள பாழடைந்த தோட்டத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

இதன் பின்னர், சந்தேகநபர் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற போது, மாணவி சந்தேகநபரின் முகத்தை கடித்து, கல்லால் முகத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

எனினும் இச் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மேலும் குறித்த பிரதேசம் பாழடைந்த பகுதியாக காணப்படுவதால் கடந்த காலத்திலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

Contact Us