தமிழர் பிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி – பாடசாலை சென்ற 113 மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!

 

கிளிநொச்சியில் ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 மாணவர்கள் அடங்கலாக ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை (27) சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும் இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை ஆகிய இடங்களில் இவ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Contact Us