கனடா செல்லும் போது மாலைதீவில் பிடிபட்ட இலங்கைத் தமிழர்களின் விபரங்கள் இதோ!! உங்கள் உறவுகளும் உள்ளனரா??

தமிழ்நாட்டின் அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் கனடாவிற்கு, கடல் வழியாகச் செல்ல முற்பட்டபோது மாலைதீவில் அகப்பட்ட ஈழ அகதிகள் 60 பேரினது பெயர் விபரங்களை மாலைதீவு அரசாங்கம் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இவர்கள், தமிழ்நாடு அகதி முகாம்களில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்கள். நீண்டநாள் மீன்பிடி விசைப்படகு மூலம் கனடாவிற்கு பயணித்தபோது. இயந்திரக் கோளாறு காரணமாக மாலைதீவை அண்டியுள்ள அமெரிக்கப்படை நிலையத்தில் இவர்கள் பிடிபட்டு அங்கே அடைக்கப்பட்டார்கள். அவ்வாறு அகப்பட்டவர்களை அமெரிக்கப்படைகள் மாலைதீவு அரசிடம் கையளித்த நிலையில், இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

Contact Us