ரெலிபோன் ‘சார்ஜ்‘ செய்வதில் ஏற்பட்ட முரண்பாடு!! சகோதரியுடன் சண்டையிட்ட பின் 17 வயது சிறுவன் தவறான முடிவு!!

 

மட்டக்களப்பு மாவட்ட. உன்னிச்சை நெடியமடு பகுதியில் சம்பவம். கூலி வேலைக்கு சென்றுவரும் 17 வயதுடைய, இளைஞன் தொடர்ந்து கைப்பேசி பாவனையாளராக இருந்துள்ளார். இவது சகோதரி மட்டக்களப்பிலுள்ள கடையொன்றில் விற்பனையாளராக தொழில் புரிகிறார்.

நேற்றைய (25/11) தினம் மாலை 07.00 மணியளவில் சகோதரி வேலை முடிந்து வீடு வந்ததும். தனது கைப்பேசியை Charge பண்ண சென்ற போது. இவரது சகோதரன் இவரை தடுத்து “என்னுடைய கைப்பேசியை Charge யில் போட்டிருக்கிறேன். நீ பிறகு போடு ” என்றிருக்கிறார். இதனைக் கேட்ட சகோதரி. தொடர்ந்து “நீ மட்டும்தானா Charge யில் போடனும்? நீ பின்னர் போட்டுக்கொள் ” என்றதும் முறன்பாடு ஏற்பட்டு , முன் கோப சுபாவமுடைய சகோதரன்.

சகோதரிக்கு முதுகில் தாக்கி விட்டு வீட்டுக்குள் சென்று அங்கிருந்த கிருமி நாசினியை உட் கொண்டு மரணித்துள்ளார். ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கமைவாக. சம்பவ இடத்துக்கு. ஆயித்தியமலை பொலிசாருடன் சென்ற. பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்,

Contact Us