லண்டனில் ஈகை சுடரினை திருமதி. கமலாவதி கந்தசாமி அவர்கள் சரியாக 12:37 மணித்துளிகளில் ஏற்ற 2021 மாவீரர் தினம் : புகைப்படங்கள் இணைப்பு

தலைவன் கட்டிய பாதையிலே விடுதலை தேடி வீறு நடை போட்டு அடிமை விலங்கு உடைக்க அறத்தின் வழி நின்று அல்லும் பகலும் தமிழ் மண் காக்க விழித்திருந்த அந்தவீர மறவர்கள் எம் மாவீரர்களை அகத்தில் இருத்தி 2021 ஆம் ஆண்டிற்கான தமிழீழ தேசிய மாவீரர் நாளினை வழமைபோல் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் நினைவு கூறப்படுகின்றது. தொடர்ந்து 12:37 மணித்துளிகளில் துயிலுமில்ல பாடல் ஒலித்த சம நேரத்தில் ஈகைச்சுடரினை மாவீரர்களை நினைவில் நிறுத்தி உன்னதமான ஈகை சுடரினை ஈகைச் சுடரினை 29/04/2009ல் வீரச் சாவாடைந்த கதிரவன் என அழைக்கப்படும் கந்தசாமி ரகுவின் தாயாரும் 27/04/2009ல் வீரச் சாவடைந்த லெப் கேர்ணல் ஜெயந்தி என அழைக்கப்படும் அமுதராணி ரகுவின் மாமியாருமாகிய திருமதி. கமலாவதி கந்தசாமி அவர்கள் ஏற்றி வைத்தார். ஏற்றியதைத் தொடர்ந்து கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகள் எம் மாவீரச்செல்வங்களுக்காக சுடரேற்ற எக்ஸல் மண்டபம் கண்ணீரில் மூழ்க எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றப்பட்டது.  புகைப்படங்கள் இணைப்பு..  கீழே..

 

Contact Us