500 வருஷம் ஆனாலும் அந்த மனுசன் புகழை அழிக்க முடியாது: அது தான் தலைவர் மாமா….

1960வதுகளில் இலங்கையில் பிரபல்யம் பண்டார நயக்க, தன் பின்னர் ஜே.ஆர், அதன் பின்னர் பிரேமதாச, அதன் பின்னரே இந்த ராஜபக்ஷர்கள். ஆனால் 1970வதுகளில் இருந்து 21ம் நூற்றாண்டில் கூட , தமிழர்களின் உன்னத தலைவராக இருப்பது. வேறு யாரும் அல்ல மேதகு பிரபாகரன் அவர்கள் தான். கடந்த 27 அன்று லண்டனில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வில், தலைவர் புகைப்பட கட் அவுன் ஒன்றை கையில் பாசமாகப் பிடித்துக் கொண்டு ஒரு சிறுமி செல்லும் காட்சி, பல வலையத்தளங்களில் வெளியாகி இருந்தது. அன்று மட்டும் அல்ல, இன்றும் கூட சிறுவர்கள் சிறுமிகள் யாவருக்கும் பிடித்த ஒரே மனிதர் தலைவர் மாமா தான். 60 என்ன 70துகள் என்ன 80 துகள் என்ன ? இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் அந்த மனுசன் புகழை அழிக்கவே முடியாது. தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வழி காட்டிய ஒரு உன்னத மனிதர்… தமிழர்களின் வழிகாட்டி… வானுயர்ந்து நிற்க்கும் தலைவரை யாருக்குத் தான் பிடிக்காமல் போகும் ? ஈழத் தமிழர்கள் நாங்கள் என்று சொல்வதில் கூட ஒரு பெருமை தான்….

Contact Us