தங்கத்தை தேடிச்சென்றவருக்கு கிடைத்த 17 கிலோ எடை கல்… பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

 


6 ஆண்டுகளாக 17கிலோ எடைகொண்ட கல்லை பேணிவந்த நபர் அதனை பரிசோதனைக்கு எடு்த்து சென்ற போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ஆஸ்திரேலியாவில் டேவிட் என்பவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக பூங்கா ஒன்றிற்கு தங்கத்தை தேடி சென்றுள்ளார். அவ்வாறு தங்கத்தைத் தேடி சென்ற அவருக்கு சுமார் 4.6 பில்லியன் வருடத்தை சார்ந்த 17 கிலோ எடையுடைய எரிகல் ஒன்று கிடைத்துள்ளது.

மேலும் அந்த கல்லை வானிலிருந்து பூமிக்கு வந்த எரிகல் என்பதை அறியாமல் அது ஒரு தங்கம் என்று நினைத்து தன்னுடைய வீட்டில் வைத்து 6 ஆண்டுகளாக டேவிட் பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் 17 கிலோ எடை கொண்ட அந்த எரிகல்லை அருங்காட்சியகம் ஒன்றிற்கு எடுத்துச்சென்று பரிசோதனை செய்துள்ளார்.

Contact Us