புதிய வகை கொரோனா பேரழிவு ஏற்படுத்துமா..? – இங்கிலாந்து விஞ்ஞானி வெளியிட்ட கருத்து

 

 

உலக நாடுகளை புதிய வகை அச்சுறுத்தி வரும் நிலையில் அது பேரழிவை ஏற்படுத்தாது என இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறி உள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில் “இது பேரழிவை ஏற்படுத்தாது. எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன்” என தெரிவித்தார்.

மேலும் “தடுப்பூசியால் கிடைக்கிற நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். ஜலதோஷம், தலைவலி ஏற்படலாம். இதற்காக வைத்தியசாலையில் , தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருகிற வாய்ப்பு அல்லது இறக்கிற வாய்ப்பு தடுப்பூசியால் வெகுவாக குறைந்து விட்டது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Contact Us