கேட்டால் தரணும் இல்லாட்டி இப்படித்தான் செய்வோம்: மேலாளர் கொஞ்சம் அசந்த நேரம் குடிமகன் செய்த செயல்!

 

 

இந்தியா-புதுச்சேரியில் தனியார் மதுபானக் கடையில் இலவசமாக மதுகேட்டு மேலாளரை மிரட்டிய நபர், அவர் அசந்த நேரம் பார்த்து பெட்டியோடு மதுபாட்டில்களை தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சி பெரும் வைரலாகி வருகின்றது.

மூலக்குளம் சாலையிலுள்ள மதுபானக் கடையில், ரவுடி புளியங்கோட்டை ரங்கராஜின் பங்காளிகள் எனக்கூறப்படும் இருவர் இலவசமாக மதுபானம் கேட்டும், மாமூல் கேட்டும் மேலாளரை மிரட்டியதாக கூறப்படுகின்றது.

அத்தோடு அதற்கு மறுப்பு தெரிவித்த மேலாளர், வேறொரு வாடிக்கையாளருக்கு மதுபானம் எடுத்துக் கொடுக்க உள்ளே சென்றார். அந்த நேரம் பார்த்து, மதுபானக் கடைகளில் இருக்கும் சிறிய இடைவெளி வழியாக உள்ளே புகுந்த ரவுடி, பெட்டியோடு மதுபானங்களை தூக்கிச் சென்றான்.எனினும் இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு மேட்டுப்பாளையம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Contact Us