திருக்குறள் சொல்லலனா தண்டனை.. பெண் போட்டியாளருக்கு ஜால்ரா அடிக்கும் ராஜமாதா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ரம்யா கிருஷ்ணன் ஆண் போட்டியாளர்களுக்கு திருக்குறள் சொல்லும் டாஸ்க் தருகிறார். இதற்கான புரோமோ சற்று முன்பு வெளியாகி உள்ளது.

அதில் ரம்யா கிருஷ்ணன் இன்னைக்கு எல்லாருக்கும் திருக்குறள் இருக்கு என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் போட்டியாளர்களிடம் மாணவர்களுக்கு கிடையாது வாத்தியார்களுக்கும் மட்டும் தான் என்கிறார். இதனால் மாணவர்களாக இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

ரம்யா கிருஷ்ணன் வார்டன் மற்றும் ஆசிரியர்கள் நால்வரும் திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும் என்று சொல்கிறார். இதை ஐந்து நிமிடத்தில் எனக்கு சொல்ல வேண்டும் இல்லன்னா தண்டனை தான் என்கிறார். இதனால் அவர்கள் நான்கு பேரும் திருக்குறளை மனப்பாடம் செய்கிறார்கள்.

மேலும் ரம்யா கிருஷ்ணனிடம் ராஜூ எனக்கு திருக்குறள் தெரியாது மேடம் என்று சொல்கிறார். அடுத்ததாக வரும் அபிஷேக் எனக்கு தண்டனை கொடுங்க என்று சரண்டர் ஆகிறார். இறுதியாக சிபி திருக்குறளை சொல்ல முடியாமல் தலையை சொரிகிறார். இதனைப் பார்த்து அவர்களை கலாய்த்து சிரிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

திருக்குறள் சொல்லாதவர்களுக்கு அக்ஷரா தண்டனை கொடுக்கிறார். இவர்கள் நால்வரும் இரவு முழுவதும் வெளியில் படுக்க வேண்டும் இதுதான் தண்டனை என்கிறார். அதற்க்கு ரம்யா கிருஷ்ணன் கைதட்டி சிரிக்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

நேற்றைய நிகழ்ச்சி முழுவதும் ரம்யா கிருஷ்ணன் பெண்களுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையான நிலையில் இன்றும் பெண்களிடம் சேர்ந்துகொண்டு ஆண் போட்டியாளர்களை கலாய்க்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு நடுநிலையாக இருந்து நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று அறிவுரை செய்கின்றனர்.

Contact Us