“காதலுக்கு வயது தடையில்லை!”… தாராளமாக செலவழிக்கும் பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…!!

கென்யாவை சேர்ந்த பெர்னார்ட் முஸ்யோகி என்ற 35 வயது இளைஞருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த 70 வயது பெண்ணான டிபோரா ஜான் என்பவருக்கும் கடந்த 2017-ஆம் வருடத்தில் முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்பு, அவர்கள் காதலிக்க தொடங்கினர். அந்த இளைஞர், பணியை இழந்ததால், அவருக்கான அனைத்து செலவுகளையும் டிபோரா தான் செய்து வருகிறார்.

இவர்களுக்கு, இந்த வருட தொடக்கத்தில் திருமணம் நடந்திருக்கிறது. பலபேர், டிபோராவின் பணத்திற்காக தான், அவரை இந்த இளைஞர் திருமணம் செய்திருக்கிறார் என்று கூறிவந்தனர். ஆனால், பெர்னார்ட் அதனை மறுக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நான் தான் டிபோராவை திருமணம் செய்ய விரும்பினேன்.

அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். ஆனால், கடந்த 2018 ஆம் வருடத்தில் அமெரிக்க நாட்டிற்கு சென்று என் இளவரசியை பார்க்க முயற்சித்தேன். அப்போது எனக்கு விசா கிடைக்கவில்லை. அதன்பின் 2020-ஆம் வருடத்திலும் விசா கிடைக்காமல் போனது. அதன் பின்பு டிபோராவே என்னை பார்க்க வந்துவிட்டார். அதன் பின்பு, எங்களுக்கு திருமணம் நடந்தது. உண்மையான காதலுக்கு வயது தடையில்லை என்று தெரிவித்துள்ளார்.

Contact Us