அவ்வளவு தான்: 2 நாளில் 12 நாடுகளுக்கு தொற்றிய பொஸ்வானா(ஒமிகோன்) வைரஸ்: பல நாடுகள் திண்டாட்டம் !

தென்னாபிரிக்க நாடான பொஸ்வானாவில் உருவாகிய, சூப்பர் சூப்பர் கொரோனா வைரசான பொஸ்வான வைரஸ், கடந்த 2 தினங்களில் சுமார் 12 நாடுகளுக்கு தொற்றியுள்ளது. 3 தினங்களுக்கு முன்னர் உலகில் 3 நாடுகளில் தான் இது அடையாளம் காணப்பட்டது. ஆனால் சற்று முன்னர்(28.11.2021) கிடைக்கப் பெற்ற, தகவலின் அடிப்படையில் உலகில் 12 நாடுகளில் இது பரவியுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து , ஜேர்மனி , செக், மற்றும் ஹாங் காங், ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தொற்றுள்ள நபர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள். இன் நாடுகள் அவசரமாக பல, கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளதாக, சற்று முன்னர் ருயிட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதனை அதிர்வு இணையம் தமிழாக்கம் செய்துள்ளது.

Contact Us