“புதிய வகை கொரோனா மாறுபாடு எதிரொலி!”… இங்கிலாந்தில் முகக்கவசம் கட்டாயம்… வெளியான அறிவிப்பு…!!

தென்னாபிரிக்காவில் ஓமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டது. தற்போது, அந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டிலும் இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

அதன்படி, இங்கிலாந்தில் மக்கள் கடைகளுக்கு செல்லும் போதும், பயணங்களின் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய் கிழமையிலிருந்து, இந்த புதிய விதி நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதேபோன்று, பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நடைமுறையும் கட்டாயம் தொடங்கும் என்று சுகாதாரத்துறை மந்திரி சாஜித் ஜாவித் கூறியிருக்கிறார்.

Contact Us