கிறிஸ்துமஸ் நிகழ்வில் கொல்லப்பட்ட 12 வயது சிறுமி..அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்..!

 

பிரிட்டனில் கடந்த வாரம் 12வயது சிறுமி கெல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது அந்த கொலை பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்திலுள்ள லிவர் லிவர்பூல் நகரில் கடந்த வியாழக்கிழமை அன்று கிறிஸ்மஸ் லைற்ஸ் சுவிஜ் ஓன் என்ற நிகழ்வில் ஏவா ஒயிட் என்ற 12 வயது சிறுமியும் கலந்துகொண்ட போது திடீரென்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் அந்த சிறுமியின் நண்பர்களான 4சிறுவர்கள் கைது செய்யப்பட்டதோடு அதில் ஒரு சிறுவன் மீது கொலை குற்றச்சாட்டு மற்றும் பயங்கர ஆயுதத்தை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அச்சிறுவனை இன்று நீதிமன்றத்தில் பொலிசார் முன்னிலைப்படுத்த உள்ளதோடு கைது செய்ப்பட்டிருந்த 3சிறுவர்களை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

இது தொடர்பில் சூ கூம்ப்ஸ் என்ற துப்பறியும் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளதாவது சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றோம்.அத்தோடு இப்படியான சூழலில் அவர்களது தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சம்பவத்தின் போது, அதனை புகைப்படம் எடுத்தவர்கள் அல்லது நேரில் பார்த்தவர்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை https://mipp.police.uk/operation/05MP21M43-PO1 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கூறியமை குறிப்பிடத்தக்கது.

Contact Us