கூட்டுக் களவாணியாக மாறிய பிரியங்கா.. இணையத்தில் பொங்கி எழுந்த ரசிகர்கள்

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா நேற்று தாமரையிடம் மொக்கை வாங்கியதால் ரொம்பவும் அப்செட்டாக இருந்தார். ஏற்கனவே கடுப்பில் இருந்த பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி தானாகவே வந்து மாட்டிக் கொண்டார்.

இமான் அண்ணாச்சி தலைவர் பதவியை தட்டிப்பறித்த நிரூப்பின் மேல் இருந்த கோபத்தாலும், இமான் நிரூப் தன் நண்பர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு தருகிறார் என்ற எரிச்சலில் அந்த டீமை பார்த்து நம்பிக்கை இல்ல, பழி வாங்குகிறார்கள், மிஸ் யூஸ் பண்ணுவீங்க என்று கூறுகிறார்.

இதனால் பொங்கி எழுந்த பிரியங்கா, அண்ணாச்சியிடம் சரிக்கு சமமாக சண்டையிடுகிறார். நாங்க என்ன மிஸ் யூஸ் பண்றோம், நீங்க ஒரு நாளாவது இந்த வீட்டுல வேலை செய்றீங்களா, எத்தனை முறை சும்மா இருந்தீங்க என்று நான் சொல்லவா என அண்ணாச்சியை வம்புக்கு இழுக்கிறார்.

பிரியங்காவின் இந்த அவதாரம் தான் தற்போது இணையதளத்தில் வைரலாக ட்ரெண்ட் ஆகியுள்ளது. எப்பொழுதும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரியங்கா தன் நண்பனை எல்லாரும் கார்னர் பண்றாங்க என்று அவர்களிடம் மல்லுக்கு நிற்கிறார்.

இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போடுகிறார்கள். இவ்வளவு கோபமாக சண்டை போடும் பிரியங்கா எத்தனை நாள் ஒழுங்காக அந்த வீட்டில் வேலை செய்திருக்கிறார். பல நாட்கள் தன் வேலையை செய்யாமல் சும்மா தான் இருந்திருக்கிறார்.

பட்ஜெட் போடும்போது மட்டும் ஐஸ்கிரீம் வேணும், சாக்லேட் வேணும் அப்படின்னு முன்னாடி வந்து நிக்கிறாங்க. மத்த வேலை எதுவும் முன்னாடி வந்து செய்வது இல்லை. மேலும் பிரியங்கா கேப்டனாக இருந்தபோது கூட தன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை.

அடுத்தவங்கள குறை சொல்றதுக்கு முன்னாடி நாம சரியா இருக்கமான்னு தெரிஞ்சுக்கோங்க பிரியங்கா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Contact Us