வவுனியாவில் கர்பமான 12 வயது சிறுமி ஒரு வேளை சாப்பாட்டிற்காக கற்ப்பை இழந்துள்ளார் ? என்ன ஒரு கேடு கெட்ட தனம் இது ?

வவுனியா, ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களுமே, ஆன பாடசாலை மாணவி ஒருவர் வயிறு வலிக்கிறது என்று வைத்தியசாலை செல்ல. மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். அவர் கர்பமாக இருப்பத்தை அறிந்து கொண்டார்கள். கர்பத்தை கலைப்பது, குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகும் என்பதனை வைத்தியர்கள் உணர்ந்த நிலையில். அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். குறித்த சிறுமி தன்னை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், ஓமந்தை மாதர் பனிக்கர்ம கிழங்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரை அடையாளம் காட்டினார்.. இதனை அடுத்து வைத்தியர்கள் பொலிசாருக்கு அறிவிக்கவே அன் நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். அன் நபருக்கும் இந்தச் சிறுமிக்கு எவ்வாறு பழக்கம் ஏற்பட்டது என்று கேட்டால் குலை நடுங்குகிறது…

மிக மிக வறுமையில் இந்த 12 வயதுச் சிறுமியின் குடும்பம் இருந்துள்ளது. பல தடவை வடையும் டீயும் வாங்கிக் கொடுத்த இன் நபர். பின்னர் உணவுப் பொட்டலங்களையும் வாங்கிக் கொடுத்து , சிறுமியோடு பழக ஆரம்பித்து. இறுதியில் அவரை கற்பழித்துள்ளார். இந்த நிலையா ஈழத் தமிழர்களுக்கு ? உணவுக்காகவா இது  நடந்தது என்று சொன்னால் , இது என்ன ஒரு கேவலமான விடையம் ?? வெளிநாட்டில் உங்கள் மகளுக்கு 70 லட்சம் 80 லட்சம் என்று செலவு செய்து திருமணம் , புப்புனித நீராட்டு விழா செய்யும் தமிழர்களே ! வட கிழக்கில் உள்ள இது போன்ற ஒரு ஏழைக் குடும்பத்திற்கு ஏதாவது 1,000 ரூபாவையாவது கொடுத்து உதவி இருக்கலாமே ? பிறந்த நாள் விழாவுக்கு கூட, 5 லட்சம் 6 லட்சம் செலவு செய்யும் தமிழ் இனமே… இவர்களை ஒரு முறை கவனிக்க தவறிவிட்டதே… ஏன் ? இவர்களும் எங்கள் சொந்தம் அல்லவா ?

போராட்டம் நடக்கும் போது விடுதலை வேண்டும் என்று காசை அள்ளி அள்ளிக் கொடுத்தீர்கள். ஆனால் இன்று அநாதைகளாக நிற்க்கும், போரினால் அவலத்தை சந்தித்த இந்த தமிழர்களையும் நீங்கள் தான் சற்று பராமரிக்க வேண்டும் என்பதனை ஏன் மறந்தீர்கள் ? இவர்களை நாம் கைவிடலாம ? இனியாவது உணர்ந்து உலக நாடுகளில் பரந்து வாழும் 8 லட்சம் தமிழர்களும் ஏதாவது ஒருவகையில், வட கிழக்கில் ஆதரவு அற்று தவிக்கும் எம்மின மக்களுக்கு உதவுங்கள். அதிலும் சிறுவர், சிறுமியர் விதவைகளுக்கு உதவுங்கள். அவர்கள் பாதை மாறாமல் இருக்க அது ஏதுவாக இருக்கும்.  உங்களுக்கு  மன ஆறுதல் கிடைக்கும். புண்ணியம் கிடைக்கும் தமிழர்களே…

Contact Us