70 ஆண்டுகள் பழமையான கட்டிடம்-இடிக்கப்போனது யார்..பலர் கவலைக்கிடம்..!

 

இந்தியா-புதுக்கோட்டையில் 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் போது திடீரென மொத்த கட்டிடமும் இடிந்து வீழ்ந்ததில் 9பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கட்டிடத்தில் துணிக்கடை இயங்கிவந்த நிலையில் அந்த கடை காலி செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக அந்த கட்டிம் பயன்னடுத்தப்படாத நிலையில் அந்த இடத்தை விலைக்கு வாங்கிய நபர் அந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட முற்பட்டுள்ளார்.

கடந்த 4 நாட்களாக ஒரு குழு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தொடர் கனமழையால் கட்டிடம் ஈரமாகி, அதன் வலுவை இழந்திருக்கையில் மொத்த கட்டிடமும் சரிந்துள்ளதோடு காயமடைந்த தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Contact Us