“லா பால்மா தீவு எரிமலையில் ஆறு போல ஓடும் தீக்குழம்பு!”…. 2700 கட்டிடங்கள் சேதம்…!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பால்மா தீவில் இருக்கும் எரிமலையிலிருந்து, தீக்குழம்பு தொடர்ந்து வெளியேறி ஆறு போல ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே அப்பகுதி முழுக்க புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. எரிமலை வெடிப்பது, சுமார் பத்து வாரங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

இதனால், 2700 கட்டிடங்களும், 11,151 நிலப்பரப்புகளும் சேதமடைந்துள்ளது. லா பால்மாவின் விமான நிலையத்தில், குவிந்து காணப்பட்ட சாம்பல்களை நீக்கி, தற்போது தான் மீண்டும் விமான சேவையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் எரிமலையிலிருந்து, தீக்குழம்பு வெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் அதிகமாக பாதிப்படைந்துள்ளனர்.

Contact Us