“புலம்பெயர்ந்தோர் முகாம் மீது பயங்கர தாக்குதல்!”… 22 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!

காங்கோ என்ற மத்திய ஆப்பிரிக்க நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டுப்போர் நடந்து வருவதால், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகிறார்கள். மேலும், “காங்கோ வளர்ச்சிக்கான கூட்டுறவு” என்ற பெயரில் அங்கு தீவிரவாத அமைப்பு இயங்கி வருகிறது.

இதேபோன்று, காங்கோவிற்கு அருகில் இருக்கும், உகாண்டாவிலும், “கூட்டணி ஜனநாயக படை” என்னும் தீவிரவாத அமைப்பு இரண்டு நாடுகளின், பொதுமக்களையும், பாதுகாப்பு படையினரையும் நோக்கி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காங்கோவின் இடூரி என்ற மாகாணத்தில், இருக்கும் இவோ என்னும் நகரத்தில் புலம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் வசித்து வந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, முகாம் இருக்கும் பகுதிக்கு, துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு நுழைந்த, “காங்கோ வளர்ச்சிக்கான கூட்டுறவு” என்ற தீவிரவாத அமைப்பினர், புலம்பெயர்ந்த மக்களை நோக்கி கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் 22 நபர்கள் பலியானதுடன், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Contact Us