பிரித்தானியாவில் உள்ள பூங்கா ஒன்றில் கிடந்த சிறுமியின் சடலத்தால் ஏற்பட்ட பரபரப்பு!

 

பிரித்தானியாவில் உள்ள பூங்கா ஒன்றில் குழந்தைகள் பனியில் விளையாடிக்கொண்டு இருந்தபோது சிறுமியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சடலமானது, ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணியளவில், ஸ்காட்லாந்தின் Lanarkshire, Hamilton பகுதியில் உள்ள Cadzow Glen பூங்காவில், கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த சடலம், வெள்ளிக்கிழமையன்று காணாமல் போன Amber Gibson எனும் 16 வயது சிறுமியின் சடலம் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Amber Gibson எனும் 16 வயது சிறுமி வெள்ளிக்கிழமை அன்று Hamilton பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்பட்ட தகவல்களுக்காக பொலிஸார் மற்றும் துப்பறியும் ஆய்வாளர்கள் தொடர்ந்து சோதனை முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக காட்சோ தெரு மற்றும் பூங்காவில் பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளனர்.

அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விவரிக்கமுடியாததாக கடுத்தப்படுகிறது.

குறித்த மரணம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 101 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம், அல்லது 0800 555 111 என்ற க்ரைம்ஸ்டாப்பர்ஸ் (Crimestoppers) மூலம் தகவலை அநாமதேயமாகத் தெரிவிக்கலாம் என பொலிஸார் கெண்ட்டுக்கொண்டுள்ளனர்.

Contact Us