அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிசூடு தாக்குதல்… 3 மாணவர்கள் உயிரிழப்பு…. 15 வயது மாணவன் கைது…!!

அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரத்திற்கு அருகில் இருக்கும் உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்திருக்கிறது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், ஆசிரியர் உட்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில், ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Contact Us