சிறுமியை வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து அதை நண்பர்களுக்கு அனுப்பிய லாரி டிரைவர்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதை வீடியோவாகவும் எடுத்து அச்சிறுமி இடமே போட்டுக் காட்டியிருக்கிறார் அந்த லாரி டிரைவர். தனது நண்பர்களுக்கும் அந்த வீடியோவை அனுப்பி சந்தோஷப்பட்டுக் கொள்ள, அதன் மூலமாகவே போலீசில் சிக்கி இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம்.

31 வயதான லாரி டிரைவர் தனது வீட்டின் அருகே எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுமியை தன் வீட்டில் ஒரு வேலை இருக்கிறது என்று சொல்லி அழைத்திருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் என்று அவர் கூப்பிட்டதும் சிறுமியும் அவர் பின்னால் சென்றிருக்கிறார். வீட்டிற்குச் சென்றதும் அங்கே வீட்டில் யாரும் இல்லை. லாரி டிரைவர் மட்டும் இருந்திருக்கிறார்.

திடீரென்று கதவை சாத்திக்கொண்ட லாரி டிரைவர், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். இந்த கொடூரத்தை வீடியோவாகவும் எடுத்து இருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்து முடித்ததும் சிறுமி அழுது கொண்டிருந்த போது அவரிடம் அந்த வீடியோவை போட்டு காட்டியிருக்கிறார். இங்கு நடந்ததை வெளியே சொன்னால், இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்.

இதனால் பயந்து கொண்டு சிறுமி அழுகையை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனாலும் அந்தக் கொடூர மிருகம் சிறுமியை அனுபவித்ததை தன் நண்பர்களிடம் சொல்லி அந்த வீடியோவை அவர்களுக்கும் அனுப்பிவைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு நல்ல நண்பர் சிறுமியின் தந்தையிடம் விஷயத்தைச் சொல்லி ஆத்திரப்பட, அவர் மகளிடம் விசாரித்த போது நடந்த உண்மையைச் சொல்லி அழுதிருக்கிறார்.

இதை அடுத்து போலீசாரிடம் புகார் கொடுக்க, அதற்குள் லாரி டிரைவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் லாரி டிரைவரை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

Contact Us