டுவிட்டர் புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் இவ்வளவு தானா…அதிர்ச்சியடைந்த மக்கள்..!

 


டுவிட்டரில் சிஇஓ பதவியில் இருந்து அதன் நிறுவனர் ஜாக் டோர்சி வெளியேறிய நிலையில் இந்தியரான பராக் அகர்வால் சிஇஓ வாக நியமிக்கப்பட்டார்.இந்த தகவல் மக்களிடத்தே வைரலாகியது.

இவ்வாறு இருக்கையில் இந்தப்பதவிக்கான சம்பளம் தற்போது வெளியாகிஉள்ளது.அதாவது வருடாந்த சம்பளமாக 1 மில்லியன் டாலர்( இந்திய மதிப்பில் ரூ.7. 49 கோடி) தொகையைப் பெற உள்ளார். இதேபோல் 12.5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனப் பங்குகளை 4 வருடங்களுக்கு பெற உள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை 281 மில்லியன் டொலரும் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,107 கோடி ரூபாவாக பெறுகின்றார் என்பதோடு மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா 43 மில்லியன் டாலரும் அதாவது இந்திய மதிப்பில் 322 கோடியும் பெறுகின்ற நிலையில் இவர்களோடு ஒப்பிடுகையில் இந்தியரான பராக் அகர்வால் குறைந்த சம்பளமே பெறுகின்றார்.

Contact Us